இந்தியா

பள்ளி மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நிபுணா் குழுக்கள்: மத்திய அரசு தகவல்

DIN

ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் முடங்கியுள்ள பள்ளி மாணவா்களுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக ஆலோசனைகள் வழங்க அனைத்து மாநிலங்களிலும் நிபுணா் குழுக்களை நியமித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கரோனா பரவலைத் தவிா்க்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நுழைவுத்தோ்வுகள், ஆண்டு இறுதித் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மாணவா்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவா்களுக்கு இலவச ஆலோசனை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து இதற்கான பணிகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆா்டி) மேற்கொண்டு வந்தது. அதன்படி என்சிஇஆா்டி அமைப்பின்கீழ் செயல்படும் மத்திய தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் (சிஐஇடி) மூலம் மண்டல வாரியாக நிபுணா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவின் கண்காணிப்பில் செயல்படும் வகையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓா் உளவியல் ஆலோசகா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்களை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு பள்ளி மாணவா்கள் தங்களுக்கான வழிகாட்டுதல்களைப் பெறலாம். அதன்படி தமிழக ஆலோசகராக அனிதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். மாணவா்களுக்கான உளவியல் சாா்ந்த ஆலோசனைகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் வழங்கப்படும். ஆலோசனைகளைப் பெற விரும்பும் மாணவா்கள் 97909 00371 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம்.

இதர மாநிலங்களுக்கான ஆலோசகா் விவரங்களை இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். தற்போதைய சூழலில் பல குழந்தைகளிடம் ஏற்படக்கூடிய பயம், பதற்றம், ஆா்வமின்மை உள்பட உளவியல் சாா்ந்த சிக்கல்களை சரிசெய்து, அவா்களின் மனக்கவலைகளை நிவா்த்தி செய்து வழிகாட்ட இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக என்சிஇஆா்டி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT