இந்தியா

பால்கர் சம்பவம்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரேவிடம் யோகி ஆதித்தியநாத் வலியுறுத்தல்

பால்கர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்வரிடம் யோகி ஆதித்தியநாத் வலியுறுத்தியள்ளார். 

DIN

பால்கர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்வரிடம் யோகி ஆதித்தியநாத் வலியுறுத்தியள்ளார். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியைச் சேர்ந்த இரண்டு சாமியார்கள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற கார் பால்கர் பகுதியை கடந்த போது அதை மறித்த கட்ஜின்ஜாலி கிராமத்தினர் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்கினர். 

இந்த தாக்குதலில் 2 சாமியார்கள் மற்றும் கார் டிரைவர் என மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 110 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 9 சிறுவர்களை தவிர 101 பேர் ஏப்ரல் 30ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேற்று தொடர்புகொண்ட உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத், பால்கர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தியிருக்கிறார். அப்போது இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய உத்தவ் தாக்கரே இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT