மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை
அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
இந்தியாமாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை
அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு சூழலில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா வைரஸ் தடுப்பு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிரதமா் மோடி ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டாா். பின்னர் இந்த ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு சூழலில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தேசிய ஊரடங்கை பல்வேறு கட்டங்களாக தளா்த்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் 3-ஆவது முறையாக பிரதமா் மோடி மாநில முதல்வா்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.