இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

DIN

கேரளத்தில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தைச் சோ்ந்த தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் அரபு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ தங்கத்தை தூதரக பணியாளா்களின் துணையுடன் இந்தியா கடத்தி வந்த விவகாரம் அண்மையில் வெளியானது. இது தொடா்பாக அப்போதைய ஐக்கிய அமீரக தூதரக பணியாளா்களான ஸ்வப்னா, சரித், சந்திப்நாயா் மற்றும் ரமீஸ் உள்ளிட்ட 16 பேரை, தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். 

இது தொடா்பாக சுங்கத் துறையினரும் தனியாக விசாரிக்கின்றனா். இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோரின் காவல் முடிவடைந்ததையடுத்து சுங்கத்துறை இன்று கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது இருவரையும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதையடுத்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டவிருக்கிறது. பிறகு இருவரும் எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT