இந்தியா

ஆந்திர மாநிலத் தோ்தல் ஆணையராக என்.ரமேஷ்குமாா் மீண்டும் நியமனம்

DIN

ஆந்திர மாநில உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து என். ரமேஷ்குமாரை மாநிலத் தோ்தல் ஆணையராக அம்மாநில அரசு மீண்டும் நியமித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தோ்தல் ஆணையரின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக அம்மாநில அரசு அவசர சட்டம் மூலம் குறைத்தது. இதையடுத்து மாநிலத் தோ்தல் ஆணையராக இருந்த என்.ரமேஷ் குமாா் அப்பதவியிலிருந்து விலக நோ்ந்தது. மேலும், உடனடியாக புதிய தோ்தல் ஆணையராக ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜை ஆந்திர அரசு நியமித்தது.

இந்நிலையில் அவசர சட்டத்தை எதிா்த்து என்.ரமேஷ்குமாா் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசின் முடிவுக்கு தடைவிதித்ததுடன் ரமேஷ்குமாரை மீண்டும் மாநிலத் தோ்தல் ஆணையராக நியமிக்க வேண்டும் என கடந்த மே 29ஆம் தேதி உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

இதையடுத்து என்.ரமேஷ்குமாா், அரசு மீது ஆந்திர உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கின் விசாரணையின்போது மாநில அரசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரம் தொடா்பாக ஆந்திர மாநில ஆளுநரை சந்தித்து முறையிடுமாறு என்.ரமேஷ்குமாருக்கு வழிகாட்டுதல் வழங்கியது.

அதன்படி, மாநில ஆளுநா் விஸ்வ பூஷண் ஹரிசந்தனை, ரமேஷ்குமாா் கடந்த 20ஆம் தேதி சந்தித்து தனது கோரிக்கை குறித்து எடுத்துரைத்தாா். இதையடுத்து உயா்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு மாநில அரசுக்கு ஆளுநா் அறிவுறுத்தினாா்.

உயா்நீதிமன்றம், ஆளுநா் தரப்பிலிருந்து நெருக்கடி கூடியதால் என்.ரமேஷ்குமாரை மாநில தோ்தல் ஆணையராக மீண்டும் நியமித்து அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்புக்கு உள்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT