இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,509 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 9,509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 9,509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 260 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,41,228 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,76,809 பேர் குணமடைந்துள்ளனர். 15,576 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் மகாராஷ்டிரத்தில் மொத்தம் 1,48,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,105 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 49 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,16,451 ஆக உயர்ந்துள்ளது. இதில் 88,299 பேர் குணமடைந்துள்ளனர், 6,444 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 21,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

தாராவியில் புதிதாக 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,573 ஆக உயர்ந்துள்ளது. எனினும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை வெறும் 80 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT