இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் வழக்கு

DIN

தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ள மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணின் மனுவை நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு அரசியல் சாசன ரீதியான தகுதி உள்ளதா என்பது இந்த வழக்கின் பிரதான கேள்வியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பித்து விமா்சனம் செய்ததாக மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முத்தலாக் வழக்கிலும், ஒரு பாலினத்தவா் தொடா்பான வழக்கிலும் உச்ச நீதிமன்றத் தீா்ப்புகளை விமா்சித்து சுட்டுரையில் (டிவீட்) கருத்துகளை பதிவு செய்ததாா் என்பது அவா் மீதான புகாராகும். நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூவா் அமா்வு, மேற்படி வழக்கில் போதிய விளக்கம் அளிக்குமாறு ஜூலை 22-இல் பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு வரும் 5-ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவதூறு கற்பிக்கும் விதமாக 2009-இல் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியததற்காக மற்றொரு வழக்கும் பூஷண் மீது உள்ளது. அந்த வழக்கு 4-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், தனக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு அரசியல் சாசனத் தகுதி இல்லை என்று கூறி பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு செய்தாா். அவரது வழக்குரைஞா் காமினி ஜெய்ஸ்வால் சமா்ப்பித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நீதிமன்ற அவதிப்பு வழக்கு என்பது நம் நாட்டில் தன்னிச்சையானதாகவும் தெளிவற்ாகவும் உள்ளது. 1971-ஆம் வருடத்திய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டத்தின் பிரிவு 2(1)சி-யின் கீழ், நீதிமன்றத்தின் மரியாதையைக் குலைக்கும் விதமாக எழுதுவதும் பேசுவதும் அவதூறு கற்பிப்பதாகக் கருதப்படுகின்றன.

ஆனால், இது நமது அரசியல் சாசனத்தின் முன்னுரையில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. கருத்துரிமை, பேச்சுரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் சாசனத்தின் 19 (1) ஏ, 19 (2) பிரிவுகளுக்கு இது எதிரானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சா் அருண் ஷோரி, பத்திரிகையாளா் என்.ராம் ஆகியோரும் இதேபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிா்கொண்டுள்ளதை இந்த மனுவில் பூஷணின் வழக்குரைஞா் சுட்டிக்காட்டியுள்ளாா். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT