தீவிர சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகள் படிப்படியாகக் குறைவு 
இந்தியா

தீவிர சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகள் படிப்படியாகக் குறைவு

நாட்டில் தினந்தோறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும்,

ENS


புது தில்லி: நாட்டில் தினந்தோறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நல்ல விஷயமாக, தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையோடு, வென்டிலேட்டர் தேவைப்படுவோர் மற்றும் ஆக்ஸிஜன் சேவை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் கடந்த 2 மாதங்களில் படிப்படியாகக் குறைந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மே 20-ம் தேதி நாட்டில் 61 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருந்த போது 1,800 (3%) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 275 (0.45%) நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வசதியும், 1,700 (2.94%) நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியும் தேவைப்பட்டது.

அதே சமயம் ஜூலை 31-ம் தேதி நாட்டில் 5.28 லட்சம் கரோனா நோயாளிகள் இருந்த போது 8,504 (1.61%) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 1580 (0.28%) நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வசதியும், 12,255 (2.3%) நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியும் தேவைப்பட்டது.

கரோனா பாதித்த நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாவது குறைந்த அதே நேரத்தில், பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மே மாத இறுதியில் கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 3% ஆக இருந்த நிலையில் தற்போது அது 2.15% ஆகக் குறைந்துள்ளது. இது, பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தின் மூலமாகவும் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவத் தொடங்கிய காலக்கட்டத்தை விட, தற்போது அதிக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதும், விரைவாக கரோனா நோயாளிகளைக் கண்டறிவதும் கூட இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT