இந்தியா

கரோனா பாதிப்பால் பலியானவர்களில் பெண்களை விட ஆண்களின் அதிகம்: மத்திய சுகாதாரத்துறை தகவல்

DIN

இந்தியாவில் கரோனாவால் பலியானவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துர்றை செயலர் ராஜேஸ் பூஃசன், “கரோனாவால் இறப்பவர்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் தான்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்தியாவில் தற்போது 5 லட்சத்து 86 ஆயிரத்து 298 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 லட்சத்திற்கும் மேலானவர்கள் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 37 சதவிகிதத்தினர் 45 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள். 11 சதவிகிதத்தினர் 26 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இறப்பு விகிதம் 1 சதவிகிதமாக உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களில் ஆண்கள் 68 சதவிகிதமும் பெண்கள் 32 சதவிகிதத்திலும் உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT