இந்தியா

திரிபுரா முதல்வரின் மனைவி, மகளுக்கு கரோனா

UNI

அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் டெப்-க்கு கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு நேற்றிரவு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்ட பதிவு,

எனக்கு கரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், மருத்துவர்கள் அறிவுரைப்படி அடுத்த ஏழு நாள்களுக்கு வீட்டித் தனிமைப்படுத்துதலில் இருக்கப்போவதாக அவர் கூறியுள்ளார். மேலும், வீட்டிலிருந்து வேலை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இருப்பினும், முதல்வரின் மனைவி நிதி டெப் மற்றும் மகள் ஸ்ரேயா ஆகியோருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. ஆனால் அவரது வயதான தாய் மற்றும் மகன் உட்பட மற்றவர்களுக்கு தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன. 

முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு பாதுகாப்பு ஊழியர் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT