முகப்பு
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுபாஷ் போஸ் கரோனாவுக்கு பலி

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுபாஷ் போஸ் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

Updated On : 5 ஆகஸ்ட், 2020 at 2:52 PM
TMC Councillor Subhash Bose dies of Covid-19
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுபாஷ் போஸ் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

மேற்கு வங்கத்தின், பிதாநகர் மாநகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் போஸ் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இதையடுத்து, 12 நாள்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். 

Advertisement

இவரின் மனைவி மற்றும் மகனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், சுபாஷ் போஸின் மறைவுக்கு அந்நாட்டு முதல்வர் மம்தா பானர்ஜி அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

இதுவரை மேற்குவங்கத்தில் 1,785 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கடந்த ஜூன் மாதம்  கஜானாவுக்குப் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.