இந்தியா

கேரளத்தில் புதிதாக 1,298 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 1,298 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 800 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 11,983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது."

இதுபற்றிய அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயனும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் தெரிவித்துள்ளதன்படி:

இன்றைய பாதிப்பில் 78 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 170 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 1,017 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 76 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. 

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,48,039 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25,205 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT