இந்தியா

அமெரிக்க சிறையில் 500-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கரோனா

UNI

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின், அரிசோனா மாநிலத்தில் கரோனா வைரஸுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள ஏஎஸ்பிசி-டக்சன் வீட்ஸ்டோன் சிறைச்சாலையில் உள்ள 517 கைதிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரையில், பொது சிறையில் தங்க அனுமதிக்கப்படமாட்டது என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் கரோனா மொத்த பாதிப்பு  4,802,275-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து, அரிசோனா சிறையில் மட்டும் தொற்று பாதித்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT