முகப்பு
இந்தியா

திரிபுரா மாநிலத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா பாதிப்பு

திரிபுரா மாநிலத்தில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
திரிபுரா மாநிலத்தில் மேலும் 146 பேருக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

திரிபுரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 146 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 14ஆக அதிகரித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கரோனா தொற்றால் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது ஆயிரத்து 875 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து இதுவரை 4 ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →