முகப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா

101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை: ராஜ்நாத் சிங் அறிவிப்பு 

சுயசார்பு திட்டத்தின்கீழ், பாதுகாப்புத்துறைக்கான 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். 

இந்தியா

101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை: ராஜ்நாத் சிங் அறிவிப்பு 

சுயசார்பு திட்டத்தின்கீழ், பாதுகாப்புத்துறைக்கான 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
அமைச்சர் ராஜ்நாத் சிங்
பகிர்:

சுயசார்பு திட்டத்தின்கீழ், பாதுகாப்புத்துறைக்கான 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொருளாதாரம், உள்கட்டமைப்பு, திட்டத்தை செயல்படுத்துதல், மக்கள்தொகை மற்றும் தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. 

அதன்படி, பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தப்படும் 101 பொருள்களின் பட்டியலைத் தயாரித்து அதனை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் தன்னம்பிக்கைக்கு இது ஒரு பெரிய படியாகும். 

தடைசெய்யப்பட்ட 101 பொருள்களின் பட்டியலில் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதலுக்கு  பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.எச். ரேடார்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

மேலும், இந்த தடையை 2020 முதல் 2024-க்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 52,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படும்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, நாட்டின் பாதுகாப்புத்துறையில் உள்ள ராணுவத் தளவாடங்கள் பல அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. 

இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பளிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும்  பாதுகாப்புத்துறையின் இந்த முடிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →