இந்தியா

உ.பி.யில் புதிதாக 4,571 பேருக்கு கரோனா: 41 பேர் பலி

DIN

லக்னெள: உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரபிரதேசத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இது தொடர்பாக உத்தரபிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 4,571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,22,609-ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 2,069-ஆக அதிகரித்துள்ளது. 47,890 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 72,650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உயிரிழப்போர் விகிதம் கடந்த மாதம் 3 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது 1.68 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் லக்னெள, கான்பூர், பிரயாகராஜ், பரெய்லி, கோரக்பூர், ஜான்சி மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் சிறப்பு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT