இந்தியா

மகாராஷ்டிரத்தில் 18 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9,181 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 9,181 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 293 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 6,711 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,24,513 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 18,050 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,58,421 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 1,47,735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதுவரை 2,289 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இன்றைய தேதியில் 79 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT