Soldier, militant killed in Pulwama encounter 
இந்தியா

புல்வாமாவில் தீவிரவாதி சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீரமரணம்

தெற்கு காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்தன. 

UNI


தெற்கு காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தன. 

புல்வாமாவில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் குழுவினர், காஷ்மீர் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுவினர் கூட்டாக இணைந்து செவ்வாய்க்கிழமை மாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

தீவிரவாதிகள் வெளியேறும் அனைத்தும் இடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. வீடு, வீடாகச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.

காயமடைந்தவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

மேலும், கூடுதல் பாதுகாப்புப் படையினர் இன்று காலை மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில் அடையாளம் தெரியாக தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT