இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,813 பேருக்கு கரோனா: ஒரேநாளில் 413 பேர் பலி

DIN


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11,813 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 413 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 9,115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,60,126 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,90,958 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 19,063 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் அங்கு 1,49,798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,200 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 884 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,27,571 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,00,954 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 6,988 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் மும்பையில் 19,332 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 6 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவிப் பகுதியில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதுவரை மொத்தம் 2,300 பேர் குணமடைந்துவிட்டதால், 90 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT