இந்தியா

ரூ.3 லட்சம் செலுத்தச் சொன்ன மருத்துவமனை: ஆம்புலன்ஸிலேயே பலியான கரோனா நோயாளி

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா நோயாளியை அனுமதிக்க தனியார் மருத்துவமனை ரூ.3 லட்சம் கட்டச் சொன்னதால் ஆம்புலன்ஸிலேயே அவர் பலியானார்.

60 வயது பெண்மணிக்கு கரோனா பாதித்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் முன்தொகையாக ரூ.3 லட்சத்தைக் கட்டச் சொன்ன நிலையில், அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் மருத்துவமனை நிர்வாகம், அந்த பெண்மணியின் குடும்பத்தார் கரோனா சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று மட்டுமே கேட்டனர். ஆனால் அவர்களை உடனடியாக கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமரிசனத்தை முன் வைத்துள்ளன. மாநில சுகாதார அமைப்பு சரியாக இயங்காததையே இது காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில், உயிரிழந்த பெண்ணின் மகன் வழக்குப் பதிவு செய்துள்ளார். முன்பணமாக உடனடியாக ரூ.80 ஆயிரத்தை செலுத்தியும், ரூ.3 லட்சத்தை கட்டினால் மட்டுமே சிகிச்சையைத் தொடங்க முடியும் என்று மருத்துவமனை கூறிவிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து புதன்கிழமை மட்டும் 54 பேர் பலியானதை அடுத்து அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,203 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,936 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 1,04,326 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT