​ஆந்திரத்தில் புதிதாக 8,012 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,040 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்) 
இந்தியா

ஆந்திரத்தில் 8,012, கர்நாடகத்தில் 7,040 பேருக்கு கரோனா

​ஆந்திரத்தில் புதிதாக 8,012 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,040 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


ஆந்திரத்தில் புதிதாக 8,012 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,040 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,012 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 88 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 10,117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,89,829 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,01,234 பேர் குணமடைந்துள்ளனர், 2,650 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் அங்கு 85,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 7,040 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 2,131 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,26,966 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 124 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,947 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், 6,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,41,491 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 81,512 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா மிதுன் கைது!

கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

பரிசுத்தம்.... கல்யாணி!

SCROLL FOR NEXT