சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோருக்கு எதிராக செயல்படுங்கள்: சிவசேனை
முகநூலில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு சிவசேனை கேட்டுக்கொண்டுள்ளது.
முகநூலில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு சிவசேனை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆளுங்கட்சியான பாஜக அரசு முகநூல் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், அவர்கள் பரப்பிய அவதூறு கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்க முகநூல் நிறுவனம் தவறியதால், சமூக வலைதளங்களை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்றவை கட்டுப்படுத்துவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் அளித்த தகவலின்படி, ஆளும் கட்சியினரின் அவதூறு கருத்துகள் மீது முகநூல் நடவடிக்கை எடுக்க தவறியதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனை, முகநூலில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
முகநூல் போன்ற லாபநோக்கு நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிடுபவர்களுக்கு எதிராக செயல்படாது. ஏனெனில் இந்தியாவில் உள்ள பலகோடி மக்கள் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய மக்கள் வணிக ரீதியில் முகநூல் நிறுவனத்திற்கு லாபம் அளிப்பவர்களாக உள்ளனர்.
சமூக வலைதளங்களில் அரசியல் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. சமூக வலைதளத்தில் ஒருவரை தரம் தாழ்த்தி பேசுவதற்காக மற்றொருவருக்கு பணம் கொடுக்கப்படுகிறது. வணிகத்தில் ஆளும் கட்சி என்பதால் ஒருவர் மீது முகநூல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் கட்சி இணைப்புகளை பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக செயல்படுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.