தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜிநாமா
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது பதவியை இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜிநாமா செய்தார். இவரது பதவிக் காலம் முடிவடைய 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.
இந்தியாதேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜிநாமா
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது பதவியை இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜிநாமா செய்தார். இவரது பதவிக் காலம் முடிவடைய 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது பதவியை இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜிநாமா செய்தார். இவரது பதவிக் காலம் முடிவடைய 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அசோக் லவாசா கடந்த 2018 ஜனவரி 23-ம் தேதி தேர்தல் ஆணையராகப் பொறுப்பெற்றார். இவரது பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிவடைகிறது. இதனிடையே, பிலிப்பின்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ஏடிபி) துணைத் தலைவராக அசோக் லவாசா அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது ஏடிபி வங்கியின் துணைத் தலைவராக இருக்கும் திவாகர் குப்தாவின் பதவிக் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, தேர்தல் ஆணையர் பதவியை அசோக் லவாசா முன்கூட்டியே ராஜிநாமா செய்து, ஏடிபி வங்கியின் துணைத் தலைவராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், எதிர்பார்த்தபடியே தேர்தல் ஆணையர் பதவியை அசோக் லவாசா ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தில், ஆகஸ்ட் 31-ம் தேதி பணியிலிருந்து விடுவிக்குமாறு லவாசா கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து, ஏடிபி வங்கியின் துணைத் தலைவராக லவாசா செப்டம்பர் மாதம் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 1973-ஆம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நாகேந்தர் சிங், அவருடைய பதவிக் காலம் முடிவதற்கு முன்பாகவே பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.