முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை எனவும் செயற்கை சுவாசக் கருவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜி உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளையில் ரத்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். எனினும், அவருக்கு சிறப்பு மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.