தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாதேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜாவடேகர் கூறியிருப்பதாவது, தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய வேலை வாய்ப்பு முகமையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடு முழுவதும் பொது தகுதித் தேர்வை நடத்தும். இதன் மூலம் நாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் பலனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கரும்புக்கு கூடுதல் கொள்முதல் விலை வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஜெய்பூர், குவகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை குத்தகைக்கு விடும் பரிந்துரைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.