இந்தியா

இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கு செப். 1 முதல் தரப் பரிசோதனை

DIN

இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் செப்டம்பர் 1 முதல் உரிய பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளை பரிசோதிக்க இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) அதிகாரிகள் ஏழு இந்திய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஐஎஸ் தர நிர்ணய அதிகாரிகளால் பொம்மை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

வர்த்தக அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பொம்மைகள் தரக் கட்டுப்பாடு ஆணை 2020 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 

பிஐஎஸ்ஸின் பிரமோத் திவாரி கூறுகையில், “நாட்டில் சுமார் 268 கட்டாய தரநிலைகள் உள்ளன. முக்கிய துறைமுகங்களில் உள்ள பிஐஎஸ் ஊழியர்கள் மாதிரிகள் எடுத்து துறைமுகத்திலேயே தயாரிப்புகளை சோதிப்பார்கள்.” என்றார்.

இந்தத் தரப்பரிசோதனை இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இந்த முறையானது வரும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பெரும்பாலும் பொம்மைகள் இறக்குமதியாகும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

மனித நேயம்...

சிவப்பு அவல்

நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT