ராஜஸ்தானில் புதிதாக 697 பேருக்கு கரோனா: மேலும் 6 பேர் பலி 
இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 697 பேருக்கு கரோனா: மேலும் 6 பேர் பலி

ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 697 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

DIN

ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 697 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 697 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69,961-ஆக அதிகரித்துள்ளது.

இதில் 14,759 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 116 பேர் குணமடைந்ததால், மொத்த பாதிப்பில் 54,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

புதிதாக 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 950-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT