குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 10-ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகா்ஜி மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் முதல் கட்ட சோதனை நடத்தியபோது அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் உறுதியானது.
அவருக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. எனினும், சுயநினைவு திரும்பாததால் அவரை மருத்துவர்கள் தொடா்ந்து தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார். இதனிடையே அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று ராணுவ மருத்துவமனை தரப்பில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.