முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் வீடு இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
Maha: One killed, four injured in house collapse in Nagpur
பகிர்:

மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். 

நாக்பூர் சதாரில் உள்ள அசாத் சௌக்கில் அமைந்துள்ள ஒரு அடுக்கு கட்டடம் திடீரென திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது என்று நாக்பூர் மாநகராட்சியின் தலைமை தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர உச்கே தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு குழுக்கள் விரைந்து, காயமடைந்த ஜந்து பேரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 43 வயதான ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் காயமடைந்து நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.