இந்தியா

மகாராஷ்டிரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு

DIN


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவி கரோனா பாதிப்பு நிலவரங்கள் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,888 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 295 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,18,711 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,22,427 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,72,873 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,854 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 776 பேர் குணமடைந்துள்ளனர், 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,39,532 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,12,743 பேர் குணமடைந்துள்ளனர். 7,502 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய தேதியில் 18,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாராவிப் பகுதியில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,737 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,380 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, 97 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT