இந்தியாவில் இதுவரை 3.76 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் இதுவரை 3.76 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 3.76 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
கொடிய வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு பயனுள்ள கருவியாக சோதனை செயல்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 2020 முதல் தொடங்கிய பரிசோதனை தற்போது வரை நடத்தப்பட்டு வருகின்றது. நாளொன்றுக்கு 10 லட்சம் வரை பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. நோய்த் தொற்றின் பரவரைக் கட்டுப்படுத்த "பரிசோதனை" ஒரு சிறந்த கருவியாக செயல்பட்டு வருகிறது.
நேற்று ஒரேநாளில் 8,23,992 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை நாட்டில் 3,76,51,512 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றார்.