மேக் இன் இந்தியா திட்டத்தை எளிதில் நிறைவேற்றலாம்: ராஜ்நாத் சிங்
கூட்டு முயற்சியின் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தை எளிதில் நிறைவேற்றலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாமேக் இன் இந்தியா திட்டத்தை எளிதில் நிறைவேற்றலாம்: ராஜ்நாத் சிங்
கூட்டு முயற்சியின் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தை எளிதில் நிறைவேற்றலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கூட்டு முயற்சியின் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தை எளிதில் நிறைவேற்றலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கூட்டு முயற்சியுடன் கூட்டுறவு முயற்சியும் சேர்ந்தால் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் தன்னிறைவு அடையலாம் என்றும் கூறினார்.
தேசிய பாதுகாப்புப்படை வீரர்களுக்கான இணையம் மூலம் பயிற்சி அளிக்கும் வகையிலான செயலியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, ''கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பாதுகாப்புப்படை வீரர்களின் பங்கு அளப்பறியது. கரோனாவிற்கு எதிராக ஒரு லச்சத்திற்கும் அதிகமான தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் நேரடியாக பயிற்சி பெறுவதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கல்வி நிலையங்களும் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்பதால், இணையம் மூலம் தேவையான பயிற்சிகளை அளிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வீரர்களுக்கு தேவையான அனைத்து வகையான பயிற்சிகளும் வழங்கப்படும்.
உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் தன்னம்பிக்கையை பெற வேண்டும். இதற்கான வெளிப்படையாக கொள்கையில் சில சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும். 101 வகையான பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்பது சீர்திருத்தங்களில் ஒன்றாகவே கொண்டுவரப்பட்டது'' என்று அவர் கூறினார்.