முகப்பு
இந்தியா

கரோனா பரிசோதனை 4 கோடியை எட்டுகிறது; 2 வாரத்தில் 1 கோடி பரிசோதனை

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் ஒரு கோடி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
கரோனா பரிசோதனை 4 கோடியை எட்டுகிறது; 2 வாரத்தில் 1 கோடி பரிசோதனை
பகிர்:


புது தில்லி: நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை 4 கோடியை எட்டுகிறது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் ஒரு கோடி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 3,94,77,848 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் ஒரு கோடி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 24 மணி நேரத்தில் 9 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த பரிசோதனை, தொற்றுப் பரவலைக் கண்டறிதல், சிகிச்சை என்ற கொள்கையை மத்திய அரசு மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்த வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்யும் அளவுக்கு நாட்டில் தொழில்நுட்ப வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,01,338 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. 

பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம், தொற்று பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கரோன பரவுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.