இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 341 காவலர்களுக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 341 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் அதிகளவில் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுபற்றிய சமீபத்திய அறிவிப்பை மகாராஷ்டிர காவல் துறை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 341 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான காவலர்களின் மொத்த எண்ணிக்கை 15,294 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,306 பேர் குணமடைந்துள்ளனர், 156 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 1,93,889 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT