இந்தியா

விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப் முதல்வர் மீது கேஜரிவால் குற்றச்சாட்டு

DIN

வேளாண் சட்டங்களைத் தடுத்து நிறுத்த பஞ்சாப் முதல்வருக்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் அதனை அவர் செய்யவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்த கருப்பு சட்டங்களை தில்லியில் நான் அமல்படுத்தியதாக பஞ்சாப் முதல்வர் குற்றம் சாட்டுகிறார். விவசாயிகள் போராடி வரும் இக்கட்டான சூழலிலும் அவரால் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்ய முடிகிறது. 

சட்டங்களை அமல்படுத்துவது மாநில உரிமைகளுக்கு அப்பாற்பட்டது. வேளாண் சட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியிருந்தால் நம்  நாட்டின் விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்?

விவசாயிகள் போராட்டத்திற்கு தில்லில் உள்ள 9 திடல்களை வழங்க மறுத்ததே பஞ்சாப் முதல்வரின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு காரணம். தில்லியில் உள்ள மைதானங்களில் விவசாயிகளை அடைத்து வைத்து சிறையாக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. விவசாயிகளை சிறைவைக்க உடன்பாடில்லாததால், அதற்கு நான் அனுமதிக்கவில்லை. இதனால் ஆளும் பாஜக அரசும் ஆம் ஆத்மி மீது கோபமாகவுள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT