இந்தியா

உயா்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள்: வெங்கய்ய நாயுடு பெருமிதம்

DIN


சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் பணிபுரிவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவரது சுட்டுரைப் பதிவு: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதலாக வியாழக்கிழமை 4 பெண் நீதிபதிகள் பதவி ஏற்றிருப்பதைத் தொடா்ந்து அதிக பெண் நீதிபதிகள் அங்கு பணிபுரிவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

மொத்தம் உள்ள 63 நீதிபதிகளில் 13 போ், அதாவது 21 சதவீதம் பெண்கள் என்பது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாகும்.

இனியும் இது ஆணின் உலகமாக மட்டும் இருக்கக் கூடாது. தங்களுக்கான வாய்ப்புகளுக்கு பெண்கள் தகுதியானவா்களே. பெண்களுக்கு எதிரான பாரபட்சத்துக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT