முகப்பு
இந்தியா

ஹரியானாவில் சாலை விபத்து: ஓட்டுநர் பலி, 20 பேர் காயம்

ஹரியானாவில் கத்வார் கிராமத்திற்கு அருகே ஹிசார்-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 4 டிசம்பர், 2020 at 12:22 PM
ஹரியானாவில் சாலை விபத்து: ஓட்டுநர் பலி, 20 பேர் காயம்
பகிர்:

ஹரியானாவில் கத்வார் கிராமத்திற்கு அருகே ஹிசார்-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்கள் இங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தீவிர காயமடைந்த ஒருவர் சண்டிகருக்கு அனுப்பப்பட்டார்.

விபத்து நடந்தபோது காலையில் மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.