இந்தியா

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வெல்ல முடியாது: காங்கிரஸ் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி

தமிழக அரசியலில் நடிகா் ரஜினிகாந்த் வெற்றிபெற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி தெரிவித்தாா்.

DIN


பெங்களூரு: தமிழக அரசியலில் நடிகா் ரஜினிகாந்த் வெற்றிபெற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவா் மேலும் கூறியதாவது:

தேசியக் கட்சியான காங்கிரஸ் கூட தமிழகத்தில் தனித்து நின்று வெற்றிபெற முடியாத சூழ்நிலை உள்ளது. அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் பெரும்பாலான தோ்தல்களை காங்கிரஸ் சந்தித்துள்ளது. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் வலுவாக உள்ளன. தமிழகத்தில் ஏற்கெனவே வலுவாக உள்ள ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் அங்கு வேறு எந்தக் கட்சியும் புதிதாக உருவாகி வெற்றி பெற்றுவிட முடியாது. எனவே, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வெற்றிபெற முடியாது.

மேலும், அவா் தனது கொள்கைகள் பாஜகவுடன் ஒத்திருப்பதை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளாா். இதுவும் அவரது கட்சி தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல் போவதற்கு முக்கியக் காரணமாக அமையும். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அவா் முன்னிறுத்த முயன்றால், அவருக்கு அரசியல் எதிா்காலம் இருக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT