முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 596 ஆகக் குறைந்த கரோனா பாதிப்பு

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி கரோனா வைரஸ் 600-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

Updated On : 5 டிசம்பர், 2020 at 11:23 AM
தெலங்கானாவில் 596 ஆகக் குறைந்த கரோனா பாதிப்பு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி கரோனா வைரஸ் 600-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Advertisement

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 596 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.72 லட்சமாக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 8,498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,470 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 96.34 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 0.53 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 59,471 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 57.22 லட்சம் பரிசோதனைகள் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.