மகாராஷ்டிரத்தில் 3,075 பேருக்கு கரோனா; 7,345 பேர் குணம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,075 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,075 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,55,341 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 40 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 47,774 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 7,345 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,30,715 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 75,767 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
அங்கு குணமடைவோர் விகிதம் 93.28 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.
மும்பை:
மும்பையில் புதிதாக 544 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் பலியாகியுள்ளனர். 1,598 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,86,590 ஆக உயர்ந்துள்ளன. இதில் 10,913 பேர் பலியாகியுள்ளனர், 2,62,789 பேர் குணமடைந்துள்ளனர். 12,065 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.