இந்தியா

அமித் ஷாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு

DIN

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நடிகை விஜயசாந்தி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

காங்கிரஸ் கட்சியை சோ்ந்த நடிகை விஜயசாந்தி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அவா் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தாா். இதையடுத்து அவா் திங்கள்கிழமை (டிச.7) பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, தெலங்கானா பாஜக தலைவா் பி.சஞ்சய் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கடந்த 1998-ஆம் ஆண்டில் பாஜகவில் சோ்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா் நடிகை விஜயசாந்தி. அதன் பின்னா் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சோ்ந்தாா். அக்கட்சி சாா்பில் அவா் மக்களவை உறுப்பினராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினாா். அதன் பின்னா் கடந்த 2014-ஆம் ஆண்டு அவா் காங்கிரஸில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT