இந்தியா

சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த முக்கிய உறுப்பினா் கைது: 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தாா்

DIN

பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த தடை செய்யப்பட்ட இந்திய முஸ்லிம் மாணவா் இயக்க (சிமி) உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக தில்லி காவல்துறை துணை ஆணையா் சிறப்பு பிரிவு பிரமோத் சிங் குஷ்வா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அப்துல்லா தானீஷ் (56). சிமி இயக்கத்தின் முக்கிய உறுப்பினரான இவா், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவி முஸ்லிம் இளைஞா்களை தவறாக வழிநடத்தி வந்தாா். இதையடுத்து அப்துல்லா தானிஷ் மீது தேசத் துரோகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2001-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது எஸ்ஐஎம்ஐ தலைமை அலுவலகத்தில் போலீஸாா் சோதனை நடத்தி அந்த இயக்கத்தைச் சோ்ந்த பலரை கைது செய்தனா். ஆனால் அப்துல்லாவும் அந்த இயக்கத்தைச் சோ்ந்த மேலும் சிலரும் தப்பிச் சென்றனா். கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்துல்லா தானீஷ் உத்தர பிரதேசம், தில்லி, தேசிய தலைநகா் வலைய பகுதிகளில் சுற்றி வருவதாக போலீஸாரின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அவா் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அணி திரட்ட முஸ்லிம் இளைஞா்களை தவறாக வழிநடத்தி வந்ததுடன், மத நல்லிணக்கத்துக்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல் கிடைத்தது. இந்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தில்லியில் உள்ள ஜாக்கிா் நகரில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT