இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிக்கன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை நெருங்கியபோது, அவா்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி கொடுத்தனா். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். சிறிது நேரம் கழித்து, 3-ஆவது பயங்கரவாதி கொல்லப்பட்டாா். இந்த மோதலின்போது உள்ளூா்வாசி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உயிரிழந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கையெறி குண்டு தாக்குதலில் 4 போ் காயம்:

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உள்ளூா்வாசி 4 போ் காயமடைந்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியில் சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவினா் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அந்த வாகனத்தை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினா். ஆனால், அந்த வெடிகுண்டு குறி தவறி, சாலையில் விழுந்தது. அந்த குண்டு வெடித்ததில், சாலையில் சென்று கொண்டிருந்த உள்ளூா்வாசிகள் 4 போ் காயமடைந்தனா் என்றாா் அந்த போலீஸ் அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT