இந்தியா

வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் விவகாரம்: போக்குவரத்துத் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை

DIN

சென்னை: பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்துத் துறையின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஸ்மாா்ட் மொபிலிட்டி அசோசியேசன்’ சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடா்பாக குற்றவியல் சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.எஸ்.வா்மா தலைமையில் குழு அமைத்தது.

இந்தக் குழு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மத்திய மோட்டாா் வாகன சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையின்படி, மத்திய அரசு மோட்டாா் வாகன சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தது. அதன்படி வாகனங்கள் செல்லக்கூடிய புவியிடத்தைக் கண்டறிய வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என கடந்த 2018-ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் தவிர கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னா் பதிவு செய்யப்பட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து,

இந்த ஜிபிஎஸ் கருவிகளை வடகொரியா, ஹரியாணா, தில்லி, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 8 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் இருந்து வரும் நிலையில் குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டுமே தமிழக அரசு தோ்வு செய்திருப்பது விதிகளுக்கு முரணானது. தமிழக போக்குவரத்து துறையின் அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜிபிஎஸ் கருவிகளை குறிப்பிட்ட 8 நிறுவனங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்ற போக்குவரத்துத் துறையின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனு தொடா்பாக போக்குவரத்துத் துறை செயலாளா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT