முகப்பு
இந்தியா

அரசியல் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது: சரத் பவார்

அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்)
பகிர்:

அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சித்தாந்தத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று (சனிக்கிழமை) தனது 80-வது பிறந்தநாளையொட்டி கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ''புதிய தலைமுறைக்கேற்ப அரசியல் தலைவர்களையும், அரசியல் பணியாளர்களையும் உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மாநிலத்தையும், நாட்டையும் பலப்படுத்த முடியும். 

அரசியல் பணியாளர்கள் தங்களது சித்தாந்தத்தில் உறுதியாக இருப்பது மிகவும் முக்கியம். 

ஜோதிபாய் பூலே, அம்பேத்கர், சத்ரபதி சாஹு மஹாராஜா ஆகியோரின் முற்போக்கான சித்தாந்தத்தை தற்கால அரசியல் பணியாளர்களுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம்.

சமூகத்தின் கடைசி நபரின் தேவைகள் மீதும் அக்கறை செலுத்தும்போது, முன்னேறிச் செல்லும் பாதையை தெளிவாக கற்றுக்கொள்ள முடியும்.

சில ஆண்டுகல் மக்களுக்காக பணியாற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளித்தனர். மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக அம்பேத்கர், ஜோதிபாய் பூலே ஆகியோர் எண்ணற்ற தியாகங்களைச் செய்தனர்.

அவர்களை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது பாதையை பின்பற்றி நடப்பது மக்கள் நலனுக்கு வழிவகுக்கும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.