பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கரோனா
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"கரோனா தொற்றுக்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனையின் முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நலம் சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."
வரும் டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நட்டா தமிழகம் வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அவரது திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.