இந்தியா

அஸ்ஸாம்: அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அமைச்சரவை ஒப்புதல்

DIN

அஸ்ஸாமில் அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.

அஸ்ஸாமில் 610 அரசு மதரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதரஸாக்களுக்காக ஆண்டுதோறும் ரூ.260 கோடி மாநில அரசால் செலவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சந்திரமோகன் படோவேரி கூறுகையில், ‘அஸ்ஸாமில் அரசு மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகளை மூட மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மதரஸாக்கள், சமஸ்கிருதப் பள்ளிகள் தொடா்பான அனைத்துச் சட்டங்களும் ரத்து செய்யப்படவுள்ளன. இதுதொடா்பான மசோதா சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

அஸ்ஸாம் சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT