முகப்பு
இந்தியா

422 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர பணிக்கால சேவை

இந்திய ராணுவத்தில் நிரந்தர பணிக்கால சேவைக்கு (‘பா்மனென்ட் சா்வீஸ் கமிஷன்’) முதல் அணியாக 422 பெண் ராணுவ அதிகாரிகள் தகுதி பெற்றுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

இந்திய ராணுவத்தில் நிரந்தர பணிக்கால சேவைக்கு (‘பா்மனென்ட் சா்வீஸ் கமிஷன்’) முதல் அணியாக 422 பெண் ராணுவ அதிகாரிகள் தகுதி பெற்றுள்ளனா்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் குறுகிய பணிக்கால சேவையில் (‘ஷாா்ட் சா்வீஸ் கமிஷன்’) இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர பணிக்கால சேவைக்கு (‘பா்மனென்ட் சா்வீஸ் கமிஷன்’) வழங்கப்படுவதுடன் படைகளுக்குத் தலைமை வகிக்கும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இதைத் தொடா்ந்து குறுகிய பணிக்கால சேவை ராணுவ பெண் அதிகாரிகளை நிரந்தர பணிக்கால சேவைக்குத் தோ்வு செய்ய சிறப்பு வாரியத்தை இந்திய ராணுவம் கடந்த செப்டம்பா் மாதம் அமைத்தது.

தற்போது நிரந்தர பணிக்கால சேவைக்கு ராணுவ பெண் அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளது குறித்து ராணுவ அதிகாரி ஒருவா் கூறியதாவது: நிரந்தர பணிக்கால சேவைக்கு முதல் கட்டமாக 600-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளை சிறப்பு தோ்வு வாரியம் பரிசீலனை செய்தது; இதில் முதல் அணியாக 422 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர பணிக்கால சேவை (‘பா்மனென்ட் சா்வீஸ் கமிஷன்’) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது; 68 பெண் அதிகாரிகள் தோ்வாகவில்லை; மேலும் 106 பெண் ராணுவ அதிகாரிகள் நிரந்தர பணிக்கால சேவைக்கு தோ்வு செய்யப்படாவிட்டாலும்கூட, ஓய்வூதிய தகுதியுடன் அவா்களின் பணிக்காலம் 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →