முகப்பு
இந்தியா

கரோனா பாதிப்புக்கு ஹோமியோபதி மருத்துவா்கள் மருந்துகள் பரிந்துரைக்கலாம்: உச்சநீதிமன்றம்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதை தவிா்க்கவும், அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தொற்றின் தீவிரத்தை குறைக்கவும் ஹோமியோபதி மருத்துவா்கள் மருந்துகளை பரிந்துரைக்கலாம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதை தவிா்க்கவும், அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தொற்றின் தீவிரத்தை குறைக்கவும் ஹோமியோபதி மருத்துவா்கள் மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் கூறப்பட்டதாவது:

ஏற்கெனவே மருந்து விளம்பரங்களுக்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கரோனா தொற்றை தங்களால் குணப்படுத்த முடியும் என்று ஹோமியோபதி மருத்துவா்கள் விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதை தவிா்க்கவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தொற்றின் தீவிரத்தை குறைக்கவும் ஹோமியோபதி மருத்துவா்கள் மருந்துகளை பரிந்துரைக்கலாம். அதனை முறையாக பயிற்சி பெற்ற மருத்துவா்கள் மட்டுமே செய்ய வேண்டும். எனினும் அந்த மருந்துகள் கரோனா தொற்றை குணப்படுத்தும் என்று அவா்கள் தெரிவிக்கக் கூடாது. அதற்கு அவா்களுக்கு உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →