விவசாயிகள் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு: தோமர்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை தெரிவித்தார்.
தொழில் துறை அமைப்பு நடத்திய காணொலி வாயிலான கருத்தரங்கில் பங்கேற்று அமைச்சர் தோமர் பேசியது:
"வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சீர்திருத்தத்தால் நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. நடைபெற்று வரும் போராட்டம் ஒரு மாநிலத்துக்குட்பட்டது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதில் விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
போராட்டம் நடைபெற்று வரும் அதே நேரத்தில், லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்."
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் கடந்த 21 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகள் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.